Monday, 24 October 2011

கனிமொழி ஜாமீன் மனு....03.11.11...


2ஜி வழக்கு : கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவ.3 வரை ஒத்திவைப்பு 
  2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. கடந்த மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டன.    
 
கனிமொழி அடுத்தக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்த கோர்ட்டிலேயே ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.  

No comments:

Post a Comment