Thursday, 27 October 2011

கார் ஓட்டியதால் விபத்து: டெலிவிஷன் நடிகர்?


மும்பையைச் சேர்ந்த முன்னணி டெலிவிஷன் நடிகர் ரோனித் ராய்.   இவர் தீபாவளி பார்ட்டி முடிந்து காரில் இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மும்பை புறநகரமான அம்பாலா பகுதியில் காரை மிகவும் வேகமாக ஓட்டி சென்ற போது 3 பேர் மீது மோதினார்.
 
அதோடு மற்றொரு கார் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கூப்பர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
 
விபத்துக்குள்ளானவர்களில் 50 வயது பெண்மணி ஒருவரும் அடங்குவார்.   இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து டெலிவிஷன் நடிகர் ரோனித் ராயை கைது செய்தனர்.
 
அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அவர் தான் மது எதுவும் அருந்தவில்லை என்று போலீசாரிடம் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment