Thursday, 27 October 2011

பாழும் மனமே மறக்காதே!


டை நீராய் ஆசைசேர்ந்து
         உருண்டு புரண்டு எழுந்தாலும்
வீடை கொடுக்கும் இறையவனின்
         விருப்பம் இன்றி முடியாதே
மேடை ஏறி பேசிநிதம்
         மோகப் பதவி பிடித்தாலும்
பாடை மீது போகவேண்டும்
         பாழும் மனமே மறக்காதே! 

No comments:

Post a Comment