Friday, 4 November 2011

10 பவுன் நகை காணாமல் போன..... கோவில்??

Kapaleeswara Templeதந்தை மகள் உறவில் கோவிலுக்கு வந்த இருவரில், மகள் அர்ச்சனைத் தட்டில் 500 ரூபாய் நோட்டைப் போட்டுள் ளார். தந்தை, என் மகள் பெயரில் குடும்பத்தோடு சிறப்பு பூஜை செய்ய வேண்டும். எப்போது வரலாம் என்று கேட்டுக்கொண்டே பூசாரியை கோவில் பிரகாரத்திற்கு அழைத்து வந்துள்ளார். இளம்பெண் பக்தியுடன் சாமி கும்பிடுவது போல் கும்பிட்டு நின்று கொண்டிருந்துள்ளார். பதில் சொல்லிய பூசாரி கருவறையினுள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.




labels:pallavaram,இளம்பெண் .கோவில் 

No comments:

Post a Comment