Thursday, 3 November 2011

ரோஜா... ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்ய சதி?.

   ’’ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியை அழிக்க காங்கிரஸ் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டிருந்தனர். 

ஆனால் அந்த வழக்கில் ஆதாரம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியை வேறு ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.
 
இதன்படி தற்போது ஓபுலாபுரம் இரும்பு சுரங்க ஊழலை கையில் எடுத்துள்ளனர்.
 
இந்த வழக்கில் எப்படியாவது ஜெகன்மோகன் ரெட்டியை சேர்த்து அவரை கைது செய்ய வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளனர். ஆந்திராவில் எப்போது தேர்தல் வந்தாலும் எங்களது கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்’’ என்று கூறினார்.






labels:roja,காங்கிரஸ்,ரோஜா ,ஜெகன்மோகன்.

No comments:

Post a Comment