Saturday, 5 November 2011

மீண்டும் பன்றிக் காய்ச்சல்?


தருமபுரி, அடுத்த மதிகோன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி சுமதி(32). தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுமதி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பன்றிக் காய்ச்சல் (எச்1 என்1) அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.


இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறும் போது சுமதிக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதால், அவரது ரத்த மாதிரியை சேகரித்து சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்ப இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


labels:நிமோனியா காய்ச்சல், டாக்டர்கள்,எச்1 என்1,

No comments:

Post a Comment