Thursday, 24 May 2012

மும்பை எனக்கு இரண்டாவது வீடு....... ஸ்ருதிஹாசன்.

                                       கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் திரையுலகில் அறிமுகமான படம் லக். பாலிவுட் படமான அந்தப்படம் சரியாக ஓடாததால், தமிழுக்கு தாவினார் ஸ்ருதிஹாசன். தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 


                                                அதேபோல அம்மணி, பவன் கல்யாணுடன் நடித்த தெலுங்கு படமான கப்பார் சிங் சக்கை போடு போடுகிறது. இந்நிலையில் ஸ்ருதிக்கு மீண்டும் பாலிவுட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்துள்ளார். விரைவில் அவர் மும்பையில் குடியேறவிருப்பதாக நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
                                    மும்பையில் வீடு பார்த்திருப்பது உண்மை தான். மும்பைக்கும் எனக்கும் எப்பொழுதும் நெருங்கிய  தொடர்பு உண்டு. எனது தாயும், தங்கையும் அங்கு தான் உள்ளனர். நான் கூட பந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் கல்லூரியில்தான் படித்தேன். 
                              
                                  அதனால் மும்பை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. அதனால் நான் பந்த்ரா பெண்ணாகி விட்டேன், என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment