Wednesday, 27 June 2012

வாத்தியார் பண்ண கொடுமை பாவம்...மாணவி வாயில டேப்பை ஒட்டி.... மயக்க



                                            ஆந்திராவில் பள்ளி மாணவியை ஐந்து மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து பள்ளி ஆசிரியர் தண்டனை வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                 ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் பள்ளி ஒன்றில் படித்து வருபவர் பாத்திமா. இவர் ஆசிரியர் தந்த வீ்ட்டு பாடத்தை முடிக்காமல் பள்ளிக்கு சென்றுள்ளார். 

                                   வீட்டு பாடம் செய்யாத மாணவியின் வாயில் டேப்பை ஒட்டவைத்து தண்ணீர் மற்றும் உணவு உட்பட எந்தவித உணவும் வழங்கமால், ஐந்து மணி நேரம் வரையில் 35 டிகிரி ‌கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார். 

                                      இச்சம்பவத்தில் மாணவி மயக்க நிலைக்கு சென்றதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ‌ சேர்க்கப்பட்டார். 

                                  இது குறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment