HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday, 6 January 2012

35 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.... தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் பங்கேற்பு...


புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 
1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் பங்கேற்பு
              தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து அருகில் உள்ள புதுவை, கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். உணவு பொருட்களை சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. சமையல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் முடி உணவில் விழுந்து விடாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்துள்ளனர். கையுறையும் அணிந்திருக்கிறார்கள்.
 
              தரமான பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பல ஆயிரம் கிலோ காய்கறிகள், அரிசி மூட்டைகள், ரவை போன்றவை குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து 24 மணி நேரமும் சமையல் நடந்து வருகிறது. அவற்றை நித்யானந்தரே நேரடியாக கண்காணிக்கிறார்.அவரே சமையல் பணிகளிலும் ஈடுபடுகிறார்.
 
              தயாரிக்கப்பட்ட உணவுகளை 15 வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று கிராமங்களில் வழங்கி வருகிறார்கள். புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நித்தியானந்தா ஆசிரமம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
 
               4 ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து கிராமங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். மின் இணைப்பு இல்லாத ஊர்களில் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு சப்ளை செய்கின்றனர்.

labels: nithyanantha.cuddalore. pondy.

No comments:

Post a Comment