கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து, நத்தத்தில் ஏப்ரல் 6ல் பிரசாரம் செய்தபோது,
'தேர்தல் விதி களுக்கு மாறாக ஒலிபெருக் கியை சத்தமாக வைத்து, பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக' நடிகர் வடிவேல், வேட்பாளர் விஜயன் ஆகியோர் மீது, விஏஓ சண்முகம், நத் தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வடிவேல், விஜயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நத்தம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வரும் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், கீழ்கோர்ட் விசாரணைக்கு தடை விதிக்கவும், விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்குகோரியும் வடிவேல், விஜயன் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
'தேர்தல் பிரசாரத்தில் பொது அமை திக்கும், பொதுமக்களுக் கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை. சட்டப்படி ஜனநாயக கடமையாற்றினோம்‘ என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு, நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் சுபாஷ்பாபு, மோகன்குமார், கருப்புசாமி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, 'வடிவேலு மீதான வழக்கை விசாரிக்க தடையும், கோர்ட்டில் வடிவேலு ஆஜராக விலக்கு அளித்தும்' உத்தரவிட்டார்.
labels:vadivel.
No comments:
Post a Comment