தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் 28-ந்தேதி காலை 10 மணியளவில் தி.நகர் முருகன் திருமண மண்டபத்தில் 60 இளைஞர்கள் ரத்த தானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணியளவில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 20 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வழங்குவது. இதை தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்குகிறார். 400 பேருக்கு குளிர்சாதன பெட்டி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 400 பேருக்கு, அரிசி குக்கர் 400, இஸ்திரி பெட்டி 400, எவர்சில்வர் வாளி 4000 பேருக்கு, டிராலி டிராவல்பேக் 3000 பேருக்கு, ஹாட் பாக்ஸ் 12 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது.
ஜெ.அன்பழகன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாலை 6 மணிக்கு லியோனி தலைமையில் பட்டிமன்றம், இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும் மார்ச் 1-ந்தேதி அன்று திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் தாய்சேய் நல மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. தென்சென்னையில் உள்ள 85 வட்டங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கிடவும், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளி இல்லங்களில் அறுசுவை உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் போன்றவை நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.