HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 16 February 2012

விதியமான கல்யாணம் சார் இது,அம்மா முன்னிலையில்....

சென்னையில் 64 ஜோடிகளுக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது. வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் நடை பெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு 64 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார். பின்னர் மணமக்களுக்கு 64 சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். விருந்தும் வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். 

மணமக்களுக்கு பட்டு வேட்டி, சேலை, தாலிக்கு 4 கிராம் தங்கம், சீர் வரிசையாக மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், குடம், குத்து விளக்கு, கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள், கெடிகாரம், மெத்தை, ஜமுக்காளம், தலையணை, சூட்கேஸ் உள்பட 64 விதமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம்.




labels:jeyalalitha. 

No comments:

Post a Comment