HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 26 April 2012

44 பேருக்கு பன்றிக் காய்ச்சல்......சென்னையில்...

                பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தீவிரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சரியான சிசிச்சை அளித்து விரைவாக குணப்படுத்தும் முறைகள் ஆகியவை குறித்து கருத்தரங்கத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது வந்தால் அதுபற்றி உடனே மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

                 மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால்தான் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அவரது உறவினர்கள், அருகில் உள்ளவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. 

                 பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவரிக்கப்பட்டது. சென்னையில் இதுவரை 44 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அனைவரும் சிகிச்சைக்குபிறகு முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். 

                  வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் பன்றிக்காய்ச்சல் பற்றி அறியும் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்குள் பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்களை கண்டறிய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. 

No comments:

Post a Comment