விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்கான வேலைகளில் தனது பெற்றோர் ஈடுபட்டு இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். மழை, சிவாஜி, கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு சமீபகாலமாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். தற்போது ஆங்கிலத்தில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் ஸ்ரேயா விரைவில் திருமணம் செய்யப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
நான் விரைவில் திருமணம் செய்யப்போவது உண்மை தான். இப்போது அந்த வயதை எட்டி விட்டேன். அதனால் எனக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகின்றனர். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை.
எனவே வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து முடிவெடுத்து இருக்கிறேன். திருமணத்துக்கு நான் ஓ.கே. சொல்லிவிட்டதால், ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது என்று அர்த்தம் கிடையாது. சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
திருமணத்திற்கு பிறகு சிலர் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். எனக்கு அது பிடிக்காது. திருமணத்திற்கு முன்பே வரப்போகிற மாப்பிள்ளையை பற்றி நன்கு தெரிந்து கொண்டு பிறகு அவரை திருமணம் செய்ய வேண்டும். எனக்கு வரப்போகும் கணவர் என்னை புரிந்தவராக, நல்ல நண்பராக, ஒளிவுமறைவு இன்றி பேசக்கூடியவராக இருக்க வேண்டும்.........

labels. sreya marriage of sreya
No comments:
Post a Comment