முதுமலை யானைகள் சிறப்பு முகாமுக்கு சென்ற 37 யானைகளுக்கும், மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளை, இம்முகாமுக்கு லாரிகளில் கொண்டு சென்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறை டிப்போவில், இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து "சிறப்பு நலவாழ்வு முகாமை' அமைத்திருந்தது. முகாமுக்கு சென்று 37 யானைகளுக்கும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். யானையுடன் வந்த பாகன்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரவு ஓய்வுக்கு பின் அதிகாலை 4.50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக தெப்பக்காட்டுக்கு யானைகளை அனுப்பினர்.
labels:elephant,camp,mettupalaiyam.
No comments:
Post a Comment