டாக்டர் ராணி, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரில் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பரஞ்சோதி தற்போது நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
நேற்று இந்த வழக்கு தொடர்பாக டாக்டர் ராணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், “கடந்த 2005&2011 கால கட்டங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரஞ்சோதியின் காரிலேயே சட்டமன்றத்திற்கும், தலைமை செயலகத்திற்கும் சென்று வந்தது, பரஞ்சோதி வரமுடியாத காலகட்டங்களில் ராணி தலைமை செயலகத்திற்கு செல்ல வசதியாக அவரது காருக்கு சட்டபேரவை வாகன அனுமதி சீட்டு வாங்கிக்கொடுத்தது போன்ற பல தகவல்களை போலீசிடம் கூறினார்.
டாக்டர் ராணி கடந்த 2001, 2011ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டு அதற்குரிய ஆதாரத்தை போலீசில் கொடுத்துள்ளார். மேலும், பரஞ்சோதி எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள், காருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டபேரவை வாகன அனுமதி சீட்டு நகல்கள், அதிமுக உறுப்பினர் அட்டை நகல் உள்ளிட்ட பலவற்றையும் ஆதாரமாக அளித்துள்ளார்.
பரஞ்சோதி எழுதிக் கொடுத்த உறுதிமொழி பத்திரம்: 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி சென்னை மாவட்டம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் உன்னுடைய கழுத்தில் தாலி கட்டி 2வது மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்றும் உன்னை விட்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் பிரியமாட்டேன் என்றும் மீண்டும் எனது முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
labels:police,doctor,
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
ReplyDelete