HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday, 18 December 2011

ஓரின சேர்க்கை............ எய்ட்ஸ் நோயால் பாதிப்பு?..

 செக்ஸ் தொழிலாளர்களை விட, ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. 
     கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.2 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7.3 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள். நோயால் பாதித்த பெண் செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4.94 சதவீதமாக குறைந்துள்ளது.

 கடந்த 2000 ஆண்டில் மொத்தம் 2.7 லட்சம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 11% பேர் பெண் செக்ஸ் தொழிலாளர்கள். அப்போது, 
நோய் பாதித்த ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருந்தது. பொதுவாக எய்ட்ஸ் நோயால் ஆண்கள் பாதிக்கப்படுவது குறைவாக உள்ள ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

   Ôசெக்ஸ் தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், நாட்டில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர்கள் உள்ள நிலையில், இப்பிரிவினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறதுÕ என இக்குழுவின் தலை வரும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை செயலாளருமான சயன் சட்டர்ஜி தெரிவித் தார். இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இப்பிரச்னையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது.


tagsHIV,sex,

No comments:

Post a Comment