HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 2 July 2012

உயரமான பெண்களுக்கு கருவக புற்று நோய் வாய்ப்பு......




             உலகம் முழுதும் நடத்திய ஆவுகளின் முடிவுகளின் படி அவர்கள் இந்த முடிவை எட்டியதாகத் தெரிவித்துள்ளனர்.

            ஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

           ப்ளாஸ் மெடிசின் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருவக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அலசப்பட்டுள்ளது.

            உலகம் முழுதும் கருவக புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், கருவக புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

         ஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளது.

       
 


        கருவக புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பலகலை புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

        ஆனாலும் உயரம் ஏன் கருவக புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.

      
  


            உதாரணமாக உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது, உதாரணமாக மார்பக புற்று நோயைக் கூறலாம்.

       அல்லது உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment