HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 9 July 2012

30 மாவட்டங்களில் காலி பணியிடங்கள் 1870 விஏஓ நியமிக்க அரசு முடிவு



                                 தமிழ்நாடு முழுவதும் 1,870 கிராம நிர்வாக அதிகாரிகள் (விஏஓ) தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. 


                       டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) கடந்த வாரம்தான் குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகளை நடத்தியது. 10,793 இடங்களுக்கு பத்தரை லட்சம் பேர் தேர்வு எழுதினர். 

                      இப்போது விஏஓ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதி படைத்த இந்த தேர்வுக்கும் பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



                      கடந்த ஆண்டு 3,484 விஏஓ இடங்களுக்கு நடந்த தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள். 


            விண்ணப்ப கட்டணம் ரூ.50 (நிரந்த பதிவு செய்துள்ளோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை). 

                     தேர்வு கட்டணம் ரூ.75. கட்டணத்தை வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாள். தேர்வு செப்டம்பர் 30ல் நடக்கிறது. 



                  தேர்வு எழுதுவோருக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், அருந்ததியர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், 


          பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது 40 (முடிந்திருக்க கூடாது) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


              இப்பதவியில் பணியமர்த்தப்படும் ஒவ்வொருவரும் அவர் பதவிப் பொறுப்பில் இருக்கும் கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஏனிந்த போட்டி

                     விஏஓ என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தே மாவட்ட நிர்வாக அமைப்பு தொடங்குகிறது. இந்த பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்றாலும் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, வக்கீல், பொறியாளர், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் எல்லாம் போட்டியிடுகிறார்கள். மாத சம்பளம் ஏறத்தாழ ரூ.15,000 கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பு, அதிகாரம் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

No comments:

Post a Comment