வீராணம் ஏரியில் நீர் மட்டம் குறைந்ததால் நேற்று முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியால் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு போதுமான மழை இல்லாததாலும், மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
கீழணையில் இருந்து வீராணத்திற்கு அனுப்பப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த மே 15ம் தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால் வீராணத்தில் தண்ணீர் குறைந்ததால் தினமும் சென்னைக்கு 77 கன அடி வீதம் அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக 18 கன அடியாக குறைக்கப்பட்டது.இதற்கிடையே ஏரியில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து வறண்டு காணப்படுவதால் நேற்று மாலையோடு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment