சபரிமலையில் ஆடி மாத பூஜைகளுக்காக, கோவில் நடையை இன்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி திறக்கிறார்.
தொடர்ந்து, மேல்சாந்தி பதினெட்டாம்படி வழியாக கீழே இறங்கி, பக்தர்கள் கொண்டு வரும் நெய் தேங்காய்களை கொட்டி எரிக்கும் பகுதியில் தீ மூட்டுவார்.
இன்று கோவில் நடை திறந்த பிறகு, பூஜைகள் ஏதுமிருக்காது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடத்தப்படும்.இதனை தொடர்ந்து,
வழக்கமான பூஜைகள் துவங்கி நடைபெறும். ஐந்து நாட்கள் திறந்திருக்கும் கோவில் நடை வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி அடைக்கப்படும்.
No comments:
Post a Comment