சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (41). இவர் அப்பகுதியில் சீப்பு, கண்ணாடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா (38). சரோஜாவிற்கு கள்ளத்தனமான உறவு இருந்து வந்துள்ளது. இதை ராஜா பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பக்கத்திலிருந்த ஆயதத்தால், சரோஜாவின் தலையை ராஜா வெட்டினார். அந்த தலையுடன், ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள எடப்பாடி போலீஸ் ஸ்டேசனிற்கு ராஜா வந்தார். மனைவி தலையுடன் போலீசில் கணவன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
labels: station, police,