HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday, 19 November 2011

சீதா வேடத்தில், நயன்தாரா இறுதி படம் இது.




 நயன்தாரா சீதா தேவியாக நடிக்க ஒப்புக் கொண்டபோதுதான் அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மூண்டது. அப்போது ரமலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.


 இதையடுத்து இந்து அமைப்புகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நயனதாரா சீதாப் பிராட்டி வேடத்தில் நடிப்பதா என்று போராட்டங்களையும் நடத்தினர்.


இருப்பினும் அதையும் மீறி பாலகிருஷ்ணா, நயனதாராவை தனது படத்தில் நடிக்க வைத்தார். இந்தப் பின்னணியில் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ஆந்திராவிலும், சென்னையிலும் திரைக்கு வருகிறது. 


இப்படத்துக்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை நயன்தாரா ஏற்கவில்லையாம்.
 இப்படத்திற்கு பிறகு தனது திருமண அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் நயன்தாரா. 


 அவர் நடிப்பிலிருந்து விலகுவது பற்றியும் தனது திருமணம் பற்றியும் அறிவிப்பார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


tag:nayanthara,prabhudeva,flim.

நடுத்தர மக்கள் பாவம் கிடு கிடு விலை உயர்வால்!


 நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக லக்னோவில் மேலும் கூறிய அவர், விலைவாசி உயர்வினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறினார். உ.பி.,யில் ராகுல் பிரசாரம் மேற்கொண்ட போது உ.பி.,யை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவில் பிச்சையெடுப்பதாக கூறிய கருத்து பற்றி கேட்டதற்கு, ராகுலின் கருத்து சரியல்ல உ.பியை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர். அவர்கள் கடின உழைப்பு மூலம் பணம் சம்பாதிக்கின்றனர் என கூறினார். அரசியல் லாபத்துக்காக மாயாவதி உபி.,யை பிரிப்பது சரியல்ல என்றும், சிறிய மாநிலங்கள் உருவாக்குவதை தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்கும் என்றும், பார்லிமென்டில் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஆதரிப்போம் என்றும், வலுவான லோக்பால் மசோதாவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என்றும் கூறினார்.

labels:lokpal,பார்லிமென்,