HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday, 24 July 2012

போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய விஜய்!

                                     




                                                  சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய். 
                                                   அங்கு சாலையில் காத்திருந்த போக்குவரத்து போலீஸார் காரை கையை காட்டி நிறுத்தி, அந்த காஸ்ட்லீகாரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பலிம்‌ ரோல்களை அகற்றாமைக்காக அபராதம் போட்டுவிட்டனர்.
                                                     நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். 

Thursday, 19 July 2012

அமிதாப் உடன் நடிக்க உள்ள குஷ்ப்பு சந்தோசம்..amithap&kushpu



                                 


                                       இந்திப்படமொன்றில் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளார். நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிப்பதற்காக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

                               இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம். அமிதாப்புடன் நடிக்கப் போவதால் மகிழ்ச்சியில் இருக்கும் குஷ்பு, 

                              இதுபற்றி அளித்துள்ள பேட்டியில், சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.