HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Monday, 9 July 2012

30 மாவட்டங்களில் காலி பணியிடங்கள் 1870 விஏஓ நியமிக்க அரசு முடிவு



                                 தமிழ்நாடு முழுவதும் 1,870 கிராம நிர்வாக அதிகாரிகள் (விஏஓ) தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. 


                       டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) கடந்த வாரம்தான் குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகளை நடத்தியது. 10,793 இடங்களுக்கு பத்தரை லட்சம் பேர் தேர்வு எழுதினர். 

                      இப்போது விஏஓ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதி படைத்த இந்த தேர்வுக்கும் பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



                      கடந்த ஆண்டு 3,484 விஏஓ இடங்களுக்கு நடந்த தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள். 


            விண்ணப்ப கட்டணம் ரூ.50 (நிரந்த பதிவு செய்துள்ளோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை). 

                     தேர்வு கட்டணம் ரூ.75. கட்டணத்தை வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாள். தேர்வு செப்டம்பர் 30ல் நடக்கிறது. 



                  தேர்வு எழுதுவோருக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், அருந்ததியர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், 


          பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது 40 (முடிந்திருக்க கூடாது) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


              இப்பதவியில் பணியமர்த்தப்படும் ஒவ்வொருவரும் அவர் பதவிப் பொறுப்பில் இருக்கும் கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஏனிந்த போட்டி

                     விஏஓ என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தே மாவட்ட நிர்வாக அமைப்பு தொடங்குகிறது. இந்த பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்றாலும் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, வக்கீல், பொறியாளர், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் எல்லாம் போட்டியிடுகிறார்கள். மாத சம்பளம் ஏறத்தாழ ரூ.15,000 கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பு, அதிகாரம் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

Saturday, 23 June 2012

தற்கொலையில் முதலிடத்தைத் தேடிக் கொண்ட இந்தியா............


      உலகிலேயே தற்கொலை மரண விகிதத்தில் இந்தியா முதலிடத்தைத் தேடிக் கொண்டதால லான்செட் நிறுனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தென் மாநிலங்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
      இந்தியாவில் மொத்தம் 22% மக்கள் தொகையைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தற்கொலை எண்ணிக்கையில் 42%ஐக் கொண்டுள்ளது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
       2010ம் ஆண்டு ஆந்திராவில் 28,000 பேரும், தமிழகத்தில் 24,000 பேரும், மகாராஷ்டிராவில் 19 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    மஹராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து 15% அளவிற்கு தற்கொலைகள் நடக்கின்றன. இந்தியாவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் டெல்லியில்தான் தற்கொலைகள் நிகழ்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
      இதில் 15 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் சாலை விபத்திலும் இளம்பெண்கள் பிரசவ நேரத்திலும் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் கோளாறுகள் காரணமாகவும் தற்கொலை முடிவைத் தேடிக்கொள்கின்றனர்
        சாலை விபத்தில் 14 சதவிகித இளைஞர்களும் பிரசவ காலத்தில் இளம்பெண்கள் 16 சதவிகிதத்தினரும் தற்கொலை மரணங்களில் இறக்கின்றனர்.
       2001-03ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது தற்கொலைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, 18 June 2012

1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்

                                                     தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்த துறை மூலம் ஏழை- எளிய புதுமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

                                
     புதுமண ஜோடிகள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நேற்று தனி பஸ்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன் மணமக்களின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள் 8 பேரும் வந்தனர். அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கான தங்கும் இடம் மற்றும் உணவு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

                             சிறப்புமிக்க இந்த திருமண விழா திருவேற்காட்டில் நடந்தது. இதற்காக திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் அருகே 4 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டபந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. 550 அடி அகலம் 30 அடி நீளம் கொண்ட இந்த பந்தலில் 19 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு அதில் திருமண விழாவுக்கு வரும் அனைவருக்கும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பந்தலில் குடிநீர் வசதி அருகில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

                   முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கேற்பதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் இடதுபுறத்தில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. வலதுபுறத்தில் புரோகிதர்கள் மகுண்டம் வளர்த்து மந்திரம் ஓதினார்கள்.

                   மேடையின் எதிரே மணமக்கள் ஜோடியாக நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். மணமகள்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டுசேலை ரவிக்கைகளையும் மணமகன்கள் பட்டுசட்டை வேட்டி துண்டு ஆகியவற்றையும் அணிந்து இருந்தனர்.

                 காலை 8 மணி அளவிலேயே மணமக்கள் வரவழைக்கப்பட்டு இருக்கைகளுக்கு வந்துவிட்டனர். உறவினர்களும் திருமணத்தை காண வந்திருந்தவர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் இருந்தனர்.

             4 கிராம் தங்க தாலியுடன் மங்கல நாண்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. மேடையும் பந்தலும் மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

                முதல்-அமைச்சர் ஜெயலலிதா சரியாக 9.30 மணிக்கு மணவிழா பந்தலுக்கு வந்தார். அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

           விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மிழக அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்று பேசினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

                    முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1006 தாலிகளை தொட்டு வழங்கினார். மணமகன்களிடம் தாலி கொடுக்கப்பட்டன. வேதமந்திரம் ஓத 9.40 மணிக்கு கெட்டிமேளம் நாதசுரம் முழங்க ஒவ்வொரு மணமகனும் தங்கள் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்கள். மாலைகளையும் மாற்றிக் கொண்டனர்.

                முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேடையில் இருந்தபடியே மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். மணமக்களுக்கு 21 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மணமகள்களுக்கு அணிய வெள்ளி மெட்டிகளும் கொடுக்கப்பட்டன.