HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, 14 July 2012

கள்ளகாதலர்கள் உஷார் பீச்சில்....... தவறு செய்தால் உடனே கைது


             

             கடற்கரைக்கு காற்று வாங்கலாம் என்று போனால் கண்டதையும் பார்க்க நேரிடுகிறது. இதனால் மக்கள் குறிப்பாக கணவர், குழந்தைகளுடன் செல்லும் பெண்கள் கடும் முகச் சுளிப்புக்கு ஆளாகிறார்கள். 
           நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, முத்தமிடுவது, கைகளைப் பிணைந்து பிசைந்து விளையாடுவது, சில்மிஷங்கள் செய்வது என களேபரப்படுத்துகின்றனர் காதல் ஜோடிகள்.
           படகு இடுக்குகளில் போய் உட்கார்ந்து கொண்டு பேசுவது, முத்தமிடுவது என்று பயமுறுத்துகின்றனர். 'அதைத்' தவிர மற்ற எல்லாவற்றையும் பீச்சிலேயே முடித்து விடுகிறார்கள் இவர்கள்.
            இளம்காதல் ஜோடிகளை விட இந்தக் கள்ளக்காதல் ஜோடிகளின் தொல்லைதான் ஏகமாக உள்ளது. மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாமல் வந்த வேலையிலேயே மும்முரமாக இருக்கும் இவர்களால் மற்றவர்களுக்குத்தான் ரொம்ப 'சங்கட்டமாக' இருக்கிறது.
        பார்க், பீச் என்றில்லை, ரயில்கள், ரயில் நிலையங்கள், தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் கூட்டம்தான்.
         சென்னை ரயில் நிலையங்கள் அனைத்திலும் இந்த காதல் ஜோடிகளை தவறாமல் பார்க்கலாம். உட்கார்ந்திருக்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் காதல் ஜோடிகளாகத்தான் தென்படுகின்றனர்.
        இந்த நிலையில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக 6 அதிகாரிகளை கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
        சமீபத்தில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட 500 ஜோடிகளைப் பிடித்த இவர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர். சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Tuesday, 3 July 2012

அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே மங்கிஸ் கார்டனில் ஏராளமான குடிசை வீடுகள் திடீர் தீ விபத்து


        நள்ளிரவில் தீ விபத்து; ஆயிரம் விளக்கில் 40 குடிசைகள் எரிந்து சாம்பல்- நாசவேலை என்று பெண்கள் புகார்  
   
        சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே மங்கிஸ் கார்டனில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நள்ளிரவு 12.15 மணியளவில் இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
 
          ஒரு குடிசையில் பரவிய தீ மளமள என பக்கத்து குடிசைகளுக்கம் பரவியது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.
 
        ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதற்குள் தீ வேகமாக ஒவ்வொரு குடிசைக்கும் பரவ தொடங்கியது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, எழும்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
     சுமார் 2 மணி நேரம் போராடி, இரவு 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் 40 வீடுகள் எரிந்து விட்டது. இந்த தீ விபத்தில் கட்டில், பீரோ, துணிமணிகள் உள்பட பல பொருட்கள் எரிந்து சாம்பலானது.
 
       சதி செயல் காரணமாக தீ விபத்து நடந்ததாக தெரிகிறது. குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு யாரோ குடிசைகளுக்கு தீவைத்து விட்டதாக அங்குள்ள பெண்கள் புகார் கூறினார்கள்.
 
          ஏற்கனவே இதுபோல் ஒரு முறை தீ விபத்து நடந் துள்ளதாகவும் இப்போது 2-வது முறையாக தீப்பிடித்ததாக அங்குள்ளவர்கள் கூறினார்கள். தீ விபத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக தீயணைப்பு துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
        தீ விபத்து நடந்த பகுதிகளை அமைச்சர் வளர்மதி, கவுன்சிலர் சின்னையன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.

Monday, 2 July 2012

ஊர் முழுவதும் தண்ணி இருந்தும் ஆனா குடிக்க தண்ணி இல்லையே வணக்கம் சென்னை


                                       வீராணம் ஏரியில் நீர் மட்டம் குறைந்ததால் நேற்று முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியால் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.

                             கடந்த ஆண்டில் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு போதுமான மழை இல்லாததாலும், மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியில் தண்ணீர் வரத்து குறைந்தது.

                             கீழணையில் இருந்து வீராணத்திற்கு அனுப்பப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த மே 15ம் தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

                           இதனால் வீராணத்தில் தண்ணீர் குறைந்ததால் தினமும் சென்னைக்கு 77 கன அடி வீதம் அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக 18 கன அடியாக குறைக்கப்பட்டது.இதற்கிடையே ஏரியில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து வறண்டு காணப்படுவதால் நேற்று மாலையோடு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.