HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Saturday, 14 July 2012

பிரபுதேவா வழியில் இயக்குநராகிறார்....மாஜி காதலி.. நயன்தாரா.





                              சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகி இப்போது இயக்குநராக மாறியிருக்கும் பிரபுதேவாவை போன்று அவரது மாஜி காதலி நயன்தாராவும் நடிகையை தொடர்ந்து இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார். 


                       அதற்கான வேலையை இப்போதே தொடங்கிவிட்டார் நயன்தாரா. ஆம்! விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித், ஆர்யா, டாப்ஸி, ஆகியோருடன் நயன்தாராவும் நடித்து வருகிறார்.


                    


                    இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதுடன், உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம் நயன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக வருவது, 


                      படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது, க்ளாப் அடித்து ஷாட் துவக்கி வைப்பது என்று உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் நயன்தாரா செய்து வருகிறாராம். 


                 படம் இயக்குவதை உதவியாளராக இருந்து கற்றுக்கொண்டு பிறகு டைரக்டராக எண்ணியுள்ளார். விரைவில் புதுப்படம் ஒன்றையும் நயன்தாரா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.