HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஆஸ்கார். Show all posts
Showing posts with label ஆஸ்கார். Show all posts

Saturday, 30 June 2012

ஒலிம்பிக்கில் 'ஜெய் ஹோ...' பாடல்...இசை ஏ.ஆர். ரஹ்மான்


லண்டன் ஒலிம்பிக்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்
           
      லண்டனில் வரும் ஜூலை மாதம் 29ம் தேதி துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் பல உலக நாட்டு இசைகள் இசைக்கப்பட உள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளின் இசைப் பாடல்கள் தொகுக்கப்பட்டு வருகிறது. 

          ஏற்கனவே இளையராஜா இசையமைத்த 'நான்தான் ஒங்கப்பன்டா' எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள ஒரு திரைப்பட பாடலும் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
       'ஸ்லம்டாக் மில்லினியர்' திரைப்படத்தில், ஆஸ்கார் விருது பெற காரணமாக அமைந்த 'ஜெய் ஹோ...' பாடல் அது என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக்கில் இடம்பெறுவது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.