HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label இந்தி. Show all posts
Showing posts with label இந்தி. Show all posts

Wednesday, 27 June 2012

அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 படத்தில்.....அசின்க்கு பிடிக்காத வார்த்தை ஐட்டம்தான்.



                                   


                                 எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஐட்டம்தான், என்று நடிகை அசின் கூறியுள்ளார். கஜினி படம் மூலம் இந்திக்கு போன அசின் இப்போது, அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 படத்தில் நடித்து வருகிறார். 


                                  முழுக்க முழுக்க பாலிவுட்டில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில், ஐட்டம் கேர்ள் ஆக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.  

                                 
       தமிழ் சினிமா குறித்து அவர் கூறுகையில், எனக்கு தமிழ் சினிமா மீது எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். 


                                       அல்லது நான் ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை ரிபீட் செய்வது போல கதைகளோடு வருகிறார்கள். அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை, என்று கூறியிருக்கிறார். 

                                      
  


                                          பெரிய படங்களில் ஐட்டம் நம்பர் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், எனக்கு பிடிக்காத வார்த்தை ஐட்டம்தான். இந்தி என்றல்ல, எந்த மொழியிலும் ஐட்டமாக நடிக்க எனக்கு பிடிக்காது, என்று கூறியுள்ளார்.