HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஐஸ்வர்யா. Show all posts
Showing posts with label ஐஸ்வர்யா. Show all posts

Saturday, 30 June 2012

இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை....

    
                                            ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் நடிக்க கேட்டபோதே அவர் மீது சந்தேகம் இருந்தது என்றார் ஸ்ருதி ஹாசன். தனுஷ் நடித்த ‘3’ படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். 


                                       இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது நடிப்பதாக ஒப்புக்கொண்டு பிறகு விலகிவிட்டார். 


                                     இந்நிலையில் மற்றொரு ஹீரோயின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் நீக்கப்பட்டு ஸ்ருதி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி ஸ்ருதி ஹாசன் மனம் திறந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

                            
       3’ படத்தில் பணியாற்றும்போது தனுஷ், ஐஸ்வர்யா, நான் மூவருமே ஒருவரையொருவர் தொழில் ரீதியாக அணுகுவது என்ற முடிவு செய்துகொண்டோம். 


                                  இதனால் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரவில்லை. தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர் இயக்கும் முதல் படம்.


                                 எப்படி கையாளப்போகிறாரோ என்று எண்ணினேன். முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் பணியாற்றியதை பார்த்தபிறகு அவர் மீதான சந்தேகம் தீர்ந்தது. ஒரு படைப்பாளியாக அவரை ஏற்றுக்கொண்டேன். இப்படத்தில் பள்ளி மாணவி, மனைவி, விதவை என 3 விதமான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருந்தது. நடிப்புக்கு வாய்ப்பு இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

                                  நான் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கேற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதை முதலில் எனது தந்தையிடம் சொல்வேன். இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை. கடந்த சில காலங்களுக்கு முன் இசையில் பிஸியாக இருந்தேன். இப்போது கேமராவுக்கு முன்னால் பிஸியாக இருக்கிறேன். 



                                சமீபத்தில் நான் நடித்து வெளியான ‘கப்பர் சிங்’ தெலுங்கு படம் வெற்றி பெற்றது சந்தோஷம். இதற்கு முன் நான் நடித்த சில படங்கள் ஓடவில்லை. ஆனால் இப்படம் வெற்றி அடைந்திருக்கிறது. சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜம்.

Tuesday, 15 May 2012

தென் ஆப்ரிக்காவில் தனுஷ்.......ஐஸ்வர்யா,

Aishwarya and Danush
                     
                              3 படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன.

                      இந்த நிலையில், சத்தமின்றி அவரது அடுத்த படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு மரியான் என்று தலைப்பிட்டுள்ளனர்.

                          பரத்பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷ் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை தருவது இது முதல்முறை. ஏற்கெனவே இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான்.

                         தென் ஆப்ரிக்காவில் இதுவரை எந்த தமிழ்ப் படமும் படமாக்கப்படாத இடங்களில் மரியான் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

                        கோடை விடுமுறை என்பதால்படப்பிடிப்புக்கு தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்காவையும் அழைத்துச் சென்றுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு, இந்தியில் 3 படத்தை வெளியிடவிருக்கிறார்

Monday, 31 October 2011

வெற்றிக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும்......


தந்தை கமலுக்கு ஸ்ருதி  பாராட்டு “வாழ்க்கையில் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்”ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.“ஓ மை பிரண்ட், கப்பார் சிங்” போன்ற தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
 
வாழ்க்கையில் நான் எந்த முடிவுகளையும் சுயமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு சுதந்திரத்தையும் எனது தந்தை கமல் எனக்கு அளித்து உள்ளார். அந்த வகையில் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். பண வசதி இருப்பதால் அதிலிருந்து தன்னம்பிக்கை பெறுகிறேன். வெற்றிக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும் அவசியம் என்பதை உணர்ந்து வைத்துள்ளேன்.
 
சினிமா, இசை, எழுத்து எல்லாவற்றிலும் அதை செய்கிறேன். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். நானே என்னை வழி நடத்துகிறேன். என் பெற்றோரிடம் சில விஷயங்களில் ஆலோசனை பெற நான் அணுகுவது உண்டு.