HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label கார் அப்பளம்போல். Show all posts
Showing posts with label கார் அப்பளம்போல். Show all posts

Monday, 24 October 2011

லாரி மீது கார் 3 பேர் பலி......


             கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த மோட்டார் கம்பெனி அதிபர் வினாயகமூர்த்தி(38), அவினாசி பஞ்சிப்பாளையத்தில் பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் கருப்புசாமி (31), கோவை தடாகம் ரோட்டை சேர்ந்த ஞானசேகரன்(58), அவினாசி புலிவாரை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஒரு காரில் பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.  
 
பின்னர் பெங்களூரில் ஆடிட்டர் அலுவலகத்திற்கு இடம்பார்த்து விட்டு 5 பேரும் நேற்று மாலை கோவை திரும்பினர். காரினை கிருஷ்ணசாமி ஓட்டி சென்றார். நேற்று நள்ளிரவு இந்த கார் பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பிரிவு ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
 
அப்போது முன்னால் சென்ற லாரியை கார் டிரைவர் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி கவிழுந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.