HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label குயப்பேட்டை.... Show all posts
Showing posts with label குயப்பேட்டை.... Show all posts

Monday, 24 October 2011

ஆதி மொட்டையம்மன் கோவில்......


ஆதி மொட்டையம்மன் கோவில்  
         சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டையில் உள்ள ஸ்ரீஆதி மொட்டையம்மன் (கிராம தேவதை) கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி 5 நாட்கள் காப்புக்கட்டப்படும். அம்மனுக்கு பொங்கலிட்டும், கூழ்வார்த்தும் அப்பகுதியில் வசிப்பவர்கள் அம்மனை வணங்குகின்றனர்.
 
இந்த திருவிழாவையொட்டி குயப்பேட்டை பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே மொட்டையம்மன் சிலைகள் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன. புரசைவாக்கத்தில் இந்த விழாவை முதல் முறையாக காணுபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.