HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சத்துக்கள். Show all posts
Showing posts with label சத்துக்கள். Show all posts

Wednesday, 26 October 2011

எலும்பு தேய்மானம் தடுக்க....

உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. எலும்புகளின் அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது. 

இந்த சத்துக்கள் பால், பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து கிடைக்கிறது. வயது, எலும்பு தேய்மானத்தை தவிர்க்க உதவும். குழந்தைகளுக்கு வளர்ச்சியின் காரணமாக உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற வலிகள் தானாகவே சரியாகி விடும். அவர்களுக்கு கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்படும் போது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால் போதும். 
ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின்&டி அதிகம் உள்ளது.  வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம்வாக்கிங் செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து விட்டு, விடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்  என்கிறார் பிசியோதெரபி மருத்துவர் செந்தில் குமார்.
ஓட்ஸ் புட்டு: ஓட்ஸ் ஒரு கப், பச்சரிசி மாவு கால் கப் ஆகியவற்றை தனியாக வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி வைக்கவும். இந்த கலவையை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சை சாறு, தாளித்த பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும். ஓட்ஸ் புட்டு உடலுக்கு ஆரோக்கிய மானது.

ஆப்பிள் சிப்ஸ்: கடலைமாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வெண்ணெய் கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் மற்றும் மிளகாய்த்தூள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.  6 துண்டு ஆப்பிளை தோல் சீவி அரைத்துக் கொள்ளவும். மாவைக் கொட்டி அதில் வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இத்துடன் அரைத்த ஆப்பிள் விழுதையும் சேர்த்து பிசையவும். பக்கோடா பதத்தில் உதிரியாக பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதில் வைட்டமின்&சி, இரும்பு சத்து உள்ளது.

குடைமிளகாய் பனீர் பிரை: 2 கப் பனீரை தனியாக வாணலியில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குடை மிளகாய் மற்றும் 2 வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி, எண்ணெயில் வதக்கவும். இத்துடன் உப்பு, அரை டீஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்கி கடைசியாக வறுத்து வைத்த பனீரை சேர்க்கவும். குடை மிளகாய் பனீர் பிரை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.