மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனம் கடந்த வாரம் அந்த விளம்பரத்தை வெளியிட்டது.
அந்த விளம்பரத்தில் 'ஷைனி இந்த புதிய செல்போனை எனக்கு வாங்கித் தந்தார்' என ஒரு இளம்பெண் கூறுகிறார்.
அந்த விளம்பரத்தில் 'ஷைனி இந்த புதிய செல்போனை எனக்கு வாங்கித் தந்தார்' என ஒரு இளம்பெண் கூறுகிறார்.
இதைக் கேட்ட மற்றொரு பெண், 'எனக்கும் அவர் ஒரு செல்போனை வாங்கித் தந்துள்ளார்' என கர்வத்துடன் கூறுகிறார். உடனே வேலைக்காரி ஒருவரின் செல்போன் ஒலிக்கிறது. அதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் அந்த இளம்பெண்களிடம், 'சாஹேப் எனக்கு வாங்கித் தந்த செல்போன் இது' எனக் கூறுகிறார்.
இந்த விளம்பரம் தன்னைக் கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக உணர்ந்த ஷைனி அகுஜா அந்த செல்போன் நிறுவனத்துக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஷைனி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அவரது வீட்டு வேலைக்காரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இதுபோன்று ஒரு விளம்பரம் வெளியாகி அவரை கோபப்படுத்தி உள்ளது.