HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சோனா. Show all posts
Showing posts with label சோனா. Show all posts

Tuesday, 20 September 2011

எஸ்பிபி.சரண் : சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.





   மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் சோனா என்மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளார் என எஸ்பிபி.சரண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 14-ம் தேதி நடந்த விருந்து ஒன்றின்போது சரண் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சரண் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். மங்காத்தா படத்தின் வெற்றியைக் கொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.
நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. என்னிடம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டார். இதனால் அவரை நான் எச்சரித்தேன். அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். மறுநாள் போலீசில் என் மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் நான் தவறு எதுவும் செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சரண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : சோனா ,எஸ்பிபி.சரண்