HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஜி.வி.பிரகாஷ். Show all posts
Showing posts with label ஜி.வி.பிரகாஷ். Show all posts

Saturday, 22 October 2011

காதல்.... வாய்ப்புகள்


              : காதல் பாடல் வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது என்று பாடலாசிரியர் தாமரை கூறினார்.  ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இயக்கும் படம் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’. அதர்வா, அமலாபால் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை. தாமரை பாடல்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தாமரை பேசியதாவது:
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன். நான் காதல் பாடல்கள் மட்டுமே எழுதுவதாக கருதிக் கொண்டு அந்த வாய்ப்புகள் மட்டுமே வருகிறது. இந்தப் படத்தில் காதலன் காதலிக்கு என்ன அன்பளிப்பு கொடுக்கலாம் என்று பாடுவதாக ஒரு பாடல். நான் எழுதிக் கொடுத்த பரிசுகள் அனைத்தும் இப்போது வழக்கொழிந்து போய்விட்டது என்றார்கள். அதன் பிறகு சென்னை நகரைச் சுற்றிப் பார்த்து பெரிய ஷாப்பிங் மால்களுக்குச் சென்று அங்குள்ள பரிசு பொருட்களை பார்த்து பிறகு பாடலை எழுதி முடித்தேன்.  இவ்வாறு தாமரை பேசினார். விழாவில் இயக்குனர் வெற்றி மாறன், ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.