HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label டிரைவ் லைன்..... Show all posts
Showing posts with label டிரைவ் லைன்..... Show all posts

Sunday, 30 October 2011

நாய்களை கொன்ற மோட்டார் நிறுவனம்....

காஞ்சிபுரம் அருகே தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று, தன்னுடைய நிறுவன வளாகத்தில் அலைந்து திரியும் நாய்களை கொல்வதற்கென்றே ஒரு நபரை நியமித்து கொன்று குவித்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜி.கே.என்., டிரைவ் லைன் இந்தியா என்ற அந்த நிறுவனம், தனது வளாகத்தினுள் அலைந்து திரிந்து தொல்லை கொடுத்து வந்த நாய்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப நபர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது. அவரும் வளாகத்தினுள் கண்ணில் படும் நாய்களை எல்லாம் சுட்டுக்கொன்று குவித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை வளாகத்தினுள்ளேயே எரித்தும் உள்ளார். இச்சம்பவத்தை படமெடுத்த அந்நிறுவன ஊழியர் ஒருவர் இதுகுறித்து ப்ளு கிராஸ் அமைப்பிற்கு அந்த படங்களை அனுப்பியுள்ளார். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் கீழ், நாய்களை சுட்டுக்கொன்ற அந்த நபர் மற்றும் மோட்டார் நிறுவனத்தின் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.