HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label தேமுதிக.. புதுக்கோட்டை .. Show all posts
Showing posts with label தேமுதிக.. புதுக்கோட்டை .. Show all posts

Monday, 18 June 2012

இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி பெற்றதாக அர்த்தம்'' ....விஜய...காந்த்



                         இடைத்தேர்தலில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளைச் சந்திக்க அக்கட்சித் தலைவர் மறுத்து விட்டதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

                          தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  '' புதுக்கோட்டை இடைத் தேர்தலில் டெபாசிட் பெற மாட்டோம் என்று பேசிய ஆளும்கட்சி தற்போது புதுக்கோட்டை இடைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளது.

                இடைத் தேர்தலில் பணியாற்றிய அக்கட்சியின் நிர்வாகிகளை கட்சியின் தலைமை சந்திக்க மறுத்து விட்டதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் 50000 வாக்குகள் கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் 30000 வாக்குகள் கிடைத்துள்ளன.

               இது ஏறுமுகத்தை தான் காட்டுகிறது. இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி பெற்றதாக அர்த்தம்'' என்று இக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.