HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label நிகர லாபம். Show all posts
Showing posts with label நிகர லாபம். Show all posts

Thursday, 27 October 2011

ரூ.1,514.31 கோடி நிகர லாபம்!!

ஐ.டி.சி நிறுவனத்தின் நிகர லாபம் 21.46 சதவீதம் அதிகரித்து ரூ.1,514.31 கோடியாக உயர்ந்துள்ளது.

இது நுகர்வோர் பொருள்கள், காகிதம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தயாரிப்பிலும், விருந்தோம்பல் துறையிலும் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், இதன் லாபம் 21.46 சதவீதம் அதிகரித்து ரூ.1,514.31 கோடியாக உள்ளது. இதன் விற்பனை 17.52 சதவீதம் அதிகரித்து ரூ. 5,038.48 கோடியிலிருந்து ரூ.5,974.18 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் சிகரெட் போன்ற அதிகளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களின் விற்பனை வருவாய் 19.49 சதவீதம் உயர்ந்து ரூ.4,308.80 கோடியாக உள்ளது. இதன் ஹோட்டல் பிரிவின் வர்த்தகம் ரூ.211.14 கோடியாக காணப்படுகிறது. வேளாண்-வர்த்தகம் மூலம் ரூ.1,434 கோடியாகவும், காகிதம், நோட்டு புத்தகங்கள், காகித அட்டைகள் போன்றவற்றின் விற்பனை ரூ.1,002.42கோடியாகவும் உள்ளது.