HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பாயல். Show all posts
Showing posts with label பாயல். Show all posts

Saturday, 14 July 2012

வகுப்பறையில் மாணவியின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்ட ஆசிரியை....


            மேற்கு வங்கத்தில் பணம் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட மாணவியை வகுப்பறையில் சக மாணவிகள் முன்பு ஆடையை அவிழ்த்து ஆசிரியை சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
            மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பதா பவன் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவி படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது சிறுநீரை அவரையே குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
           மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டம், கோபால்நகரில் உள்ளது கிரிபாலா பாலிகா வித்யாலயா மகளிர் பள்ளி. அங்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவி பாயல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
          கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்ற பாயல் சக மாணவியின் பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ஆசிரியை ரூபாலி சக மாணவிகள் முன்பு வகுப்பறையில் வைத்து பாயலின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்டார்.
      இதனால் மனமுடைந்த பாயல் வீட்டுக்கு சென்றதும் வகுப்பறையில் நடந்தவற்றைத் தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து அவரது தந்தை பபித்ரா மோண்டல் ஆசிரியை ரூபாலி மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழ்ககுப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
        பணம் கிடைத்ததா என்று கேட்டதற்கு விசாரணை நடந்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.