HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பெட்ரோல். Show all posts
Showing posts with label பெட்ரோல். Show all posts

Tuesday, 17 July 2012

காரில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட மோகன் கைது



                சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லதா. 22 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் புதிதாக கார் வாங்கினர். அந்தக் காரை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு கிளம்பினார்.
            அடையார், கஸ்தூரிபாய் நகர் வந்த அவர் 3வது கிராஸ் தெருவில் காரை ஓட்டி வந்தபோது திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனால் கார் நின்று விட்டது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அவர் என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தார்.
            அப்போது அங்கு வந்த கால் டாக்சி டிரைவரான 24 வயதான மோகன் என்பவர், உதவி செய்வதாக கூறியுள்ளார்.
            இதை நம்பிய லதா, காரில் பெட்ரோல் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு மோகன், அருகில் இருந்த ஒரு பெட்ரோல் பங்குக்குப் போய் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். பின்னர் அதை லதாவின் காரில் ஊற்றினார். அதற்கு லதா நன்றி சொன்னார். அப்போது, மோகன், தனது கார் அருகில் நிற்பதாகவும், தன்னை அங்கே இறக்கி விட்டு விட முடியுமா எனறு லதாவிடம் கேட்டார். அதற்கு உடனே சரி என்று கூறினார் லதா.
           பின்னர் லதா காரை கிளப்ப, பின் இருக்கையில் அமர்ந்திருந்த மோகன், லதா எதிர்பாராத நேரத்தில், பின்னாலிருந்து லதாவை கட்டிப்பிடித்தார். பின்னர் அவரது முகத்தில் முத்தமிடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா உடனே காரை நிறுத்தி விட்டு உதவி கோரி கத்தினார்.
          அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்தனர். காருக்குள் இருந்த மோகனை வெளியே இழுத்து சரமாரியாக அடித்தனர். அவரை விசாரித்தபோது திருவாரூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
          லதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மோகனைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Thursday, 24 May 2012

டீசல், கேஸ் விலையும் உயர்த்தப்படும்? நாளை அறிவிப்பு......

                                     


                                      பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து டீசல், கேஸ் விலையும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக முடிவெடுக்க அமைச்சர்கள் குழு நாளை கூடவிருக்கிறது.



                                பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 7.50 என திடீரென நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது. 

                                           இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத மக்களுக்கு டீசல், கேஸ் விலையையும் உயர்த்தி அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்க மத்திய முடிவுசெய்துள்ளது.


                                           டீசல் விலையை ரூ 5 வரை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனவே டீசல் மற்றும் கேஸ் விலையையும் மத்திய அரசு உயர்த்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


                                          பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து தில்லியில் லிட்டர் பெட்ரோல் ரூ 73.14-க்கும் ஹைதராபாதில் லிட்டர் ரூ 81.44-க்கும் விற்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.