HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Saturday, 14 July 2012

விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்ற...ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல்

                  

                     காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். 

              திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். 

     இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...?

                 தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு.

                

                       இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். 

           அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.  

              


                     குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. 
அவளது குழந்தைத் தனங்களையும், 

            தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.

           


                  குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், 

         அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். 

               உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம். 
 
           விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

          

             வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன்  மனைவி யைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், 
           விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.

Tuesday, 1 November 2011

குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் பெண்கள்.....



தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்களை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்களும் அதிகரித்து வருகிறார்கள்.

குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். 'நாம் இருவர் நமக்கேன் இன்னும் ஒருவர்' என்ற புதுமொழியை உருவாக்கும் பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டனராம்.
முன்பெல்லாம் குழந்தை பெறுவதில் கணக்கே இருக்காது. உடம்பு தாங்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் அந்தக் காலத்துப் பெண்மணிகள். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள் அன்று இருந்தனர். ஆனால் இன்று 'கூட்டமே' இல்லாத குடும்பங்கள்தான் அதிகமாக உள்ளது.
குழந்தை பெற்றுக் கொள்ள இந்தக் காலத்துப் பெண்கள் யோசிக்க, தயங்க பல காரணங்கள். வேலைக்குப் போகும் பெண்களாக இன்றைய மகளிர் அதிகளவில் இருப்பதால் வேலைக்கும் போய்க் கொண்டு குழந்தையையும் பார்த்துக் கொள்ள சிரமப்படுகின்றனர். குழந்தை பெற்றால் எடை அதிகரித்து அழகு போய் விடும். உடல் தளர்ந்து விடும், உடல் கட்டு குலைந்து விடும். குழந்தைக்காகவே முழு நேரத்தையும் செலவிட வேண்டும். நினைத்தப்படி நினைத்த இடத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. கணவரை முன்பு போல் கவனிக்க முடியாது. இதெல்லாம் குழந்தை பெறத் தயங்கும் பெண்கள் கூறும் சில காரணங்கள்.

கஷ்டப்பட்டு உழைத்து அலுவலகத்தில் நல்ல பெயர் எடுத்திருப்போம். பதவி உயர்வு கிடைக்கும் நேரத்தில் பிரசவ லீவு போட்டால் பதவி உயர்வு போய் விடும். இப்படிப் பல காரணங்களை வைத்திருக்கிறார்கள் இந்தப் 'பிள்ளை விரும்பா' பெண்கள். இதனால் வேலைக்குப் போகும் பெண்கள் முடிந்த அளவுக்கு குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். 

உனக்கு கல்யாணமாகி 4 ஆண்டுகளாகிவிட்டதே, குழந்தை பெறும் எண்ணமே இல்லையா என்றால், அதுக்கென்ன அவசரம், அப்புறம் பார்க்கலாம் என்கிறார்கள் பலர்.


நம் பாட்டிமார்கள் 12,13 குழந்தைகள் பெற்றனர். நம் அம்மாமார்கள் 2 முதல் 5 வரை பெற்றனர். தற்போதுள்ள தலைமுறை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறது. 

குழந்தை பெற்றுக்கொள்வது சுமையல்ல அதுவும் ஒரு சுகம் தான் என்பதை இந்தப் பெண்கள் உணர வேண்டும். தாய்மைப் பேறு என்பது எல்லோருக்கும் கிடைக்காதது