HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பெரிய குடும்பம். Show all posts
Showing posts with label பெரிய குடும்பம். Show all posts

Tuesday, 25 October 2011

40வது திருமணம் செய்ய பெண் தேடியவர்!!!!!!!!!

பக்த்வாங் (மிசோரம் : மனைவிகள் 39, குழந்தைகள், பேரக் குழந்தைகள் 120க்கு மேல்... என பரந்து விரிந்த குடும்பத்தின் 67 வயது தலைவர், விரைவில் திருமணம் செய்து கொள்ள 40வது மனைவியை தேடிக் கொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தின் பக்த்வாங் பகுதியை சேர்ந்தவர் ஜியாகாகா சானா. வயது 67. பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஏற்கனவே 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் என 181 உறுப்பினர்கள் இவரது குடும்பம். இதற்காக உலகின் மிகப் பெரிய குடும்பம் என்ற சாதனை படைத்தவர்.

குடும்பத்தை இன்னும் பெரிதாக்க விரும்புவதாக கூறும் அவர், அதற்காக 40வது திருமணம் செய்ய பெண் தேடி வருவதாக கூறுகிறார். ‘‘இன்னும் சில பெண்களை திருமணம் செய்து எனது குடும்பத்தை பெரிதாக்க விரும்புகிறேன். இப்போது பெண் தேடி வருகிறேன். இதற்காக எல்லை தாண்டி கூட செல்லத் தயார்’’ என்றார். சானாவின் தந்தை பெயர் சாலியன்சானா. அவருக்கு 50 மனைவிகள். குழந்தைகள், பேரக் குழந்தைகள் எண்ணிக்கை பற்றி புள்ளிவிவரம் இல்லை.

தந்தையின் பெயரில் 1994ல் சாலியன்சானா என்ற இனத்தை தனியாக அழைத்தார் ஜியாங்காகா சானா. இந்த இனத்தவர் 1,700 பேர் இப்போது மிசோரமில் வசிக்கின்றனர். இவர்களுக்கும் மற்ற கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் தொடர்பு இல்லை. மலைப் பகுதியில் 100 அறைகளை கொண்ட 4 அடுக்கு மாடி வீட்டில் இந்த 181 பேர் குடும்பம் வசிக்கிறது. சானாவின் 39 மனைவிகளில் யார் அவரது அறையில் இரவு தங்குவது என்பதை முடிவு செய்ய சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது. இந்த வாரம்... கடைசி இளம் மனைவியின் வாரமாம்.