HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பெற்றோருடன். Show all posts
Showing posts with label பெற்றோருடன். Show all posts

Thursday, 27 October 2011

தன் பிறந்தநாளை மாற்று திறனாளிகளுடன் சினேகா!


         சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா.


பிறந்த நாள் அன்று  மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாட்டையும் பாடினார்.

பார்வையற்றவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி பாடினர். பின்னர் எல்லோரும் ஒருமித்தக் குரலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் தன் கையாலேயே உணவு பரிமாறினார் சினேகா.