HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பொலிஸ். Show all posts
Showing posts with label பொலிஸ். Show all posts

Tuesday, 22 May 2012

நயாகரா நீர் வீழ்ச்சியிலிருந்து குதித்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்....


                                           அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா உள்ளது. இதன் உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
                                           நேற்று காலை 10.20 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒருவர், நயாகரா வீழ்ச்சியின் 180 அடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
                                         அவர் கீழே விழுந்ததைப்பார்த்த சுற்றுலாப்பயணிகள் அவரை மீட்க மீட்புப்படையினருக்கு அழைப்பு விடுத்தனர்.
                                         இதையடுத்து மீட்புபடையினர் உதவியுடன் அவரை மீட்டபோது உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இருந்தும் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
                                     தற்கொலைக்கு முயன்ற அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.


nayagara_suicide_002
nayagara_suicide_006

Wednesday, 26 October 2011

2 பெண்களை...கடத்தி?



news
 திருகோணமலை ஹொரவப் பொத்தானை வீதியில் இரண்டு பெண்களை லொறியொன்றில் கடத்திச்செல்ல முற்பட்ட இரண்டு பேரைத் தாம் கைது செய்துள்ளனர் என்று மொறவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இரண்டு பெண்களும் ஹொரவப் பொத்தானை திருகோணமலை வீதியினுடாக கோமரங்கடவல பகுதிக்குச் செல்ல பஸ்ஸூக்காகக் காத்திருந்த வேளையிலேயே இந்தக் கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாகனமின்றித் தவித்ததால் இரண்டு பெண்களும் சுயவிருப்
பத்தின் பேரில் லொறியில் ஏறிச்சென்றுள்ளனர். திரியாய் சந்தியில் இறங்குவதற்காக முயற்சித்தபோதும்தி லொறியை நிறுத்த வில்லையெனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
மொறவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் சாரதி லொறியை நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டபோது அதனைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் கன்னியா பகுதியில் வைத்து சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் முதலாம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பான விசா ரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.