HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label மகேந்திர சிங் ரத்தோர். Show all posts
Showing posts with label மகேந்திர சிங் ரத்தோர். Show all posts

Tuesday, 5 June 2012

துணை விமானி மகேந்திர சிங் ரத்தோர் மற்றும் கேரள பொறியாளர் ரிஜோ எல்டோஸ் ஆகியோர் விமான விபத்தில்


                                       நைஜீரியாவின் வர்த்தக நகரமான லாகோசிலிருந்து தலைநகர் அபுஜா நோக்கி புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளானது.
                                           இந்த விமானம், லாகோசிலிருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே, குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 153 பேரும் பலியாகினர். இதே போன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பலர் உயிரிழந்தனர். 
                               இதுவரை அந்த பகுதியை சேர்ந்த 40 பேர் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. இன்னும் பலர் பலியாகி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 இந்தியர்களும் அடங்குவர். விமானத்தை இயக்கிய துணை விமானி மகேந்திர சிங் ரத்தோர் மற்றும் கேரள பொறியாளர் ரிஜோ எல்டோஸ் ஆகியோர் விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை இவர்களது உடல்கள் கண்டறியப்படவில்லை.