HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label மருத்துவமனை. Show all posts
Showing posts with label மருத்துவமனை. Show all posts

Sunday, 8 July 2012

போதை ஆசாமியிடம் பணம் திருட்டு தகராறில் பார் ஊழியர் குத்திக் கொலை..








                          போதை ஆசாமியிடம் பணம் திருடிய தகராறில் பார் ஊழியர் குத்தி கொல்லப்பட்டார். தாம்பரம், முத்துலிங்க முதலி தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. 


                  கடையின் அருகில் டாஸ்மாக் பார் உள்ளது. இதை தாம்பரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் நடத்துகிறார். இந்த பாரில் நேற்று மது அருந்திய ஒருவர், போதை யில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அவரை பார் ஊழியர்கள் வெளியில் கொண்டுவந்து விட்டனர்.

                அப்போது அந்த போதை ஆசாமியின் பாக்கெட்டில் இருந்த பணத்தை,  சரவணன் (24) என்ற பார் ஊழியர் திருடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக ஊழியர்கள் சரவணனை திட்டியுள்ளனர். 



             அப்போது அதே பாரில் பணிபுரியும் ராமநாதபுரம் திட்டக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) என்பவர் சரவணனை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன், பீர்பாட்டிலை உடைத்து சுப்பிரமணியன் கழுத்தில் குத்தியுள்ளார். 

             சகஊழியர்கள், சுபிரமணியனை குரோம்பேட்டை மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து சரவணனை கைது செய்து விசாரிக்கின்றனர். 



கொலையை மறைக்க முயற்சி: 


              சுப்பிரமணியனை மருத்துவமனைக்கு கொண்டுசென்றதும், பாரில் படிந்திருந்த ரத்தக்கறையை கழுவியுள்ளனர். போலீசார் வந்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனர். கொலை சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது உறுதியானதும், அந்த பாருக்கு போலீசார் சீல் வைத்தனர்.