HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts
Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts

Tuesday, 15 May 2012

என் மகள்களுக்கு சினிமாவே வேண்டாம் ............. ஸ்ரீதேவி

I dont want my daughters as actors : Sridevi            
                             
                     
                        
                             திரையுலகில் இதுநாள் வரை முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகைகளில் பெரும்பாலோனோர் தங்கள் மகளையும் சினிமா துறையில் தான் இறக்கி விட்டிருக்கின்றனர். 




           ஆனால் முதன்முறையாக என்    மகள்களுக்கு சினிமாவே வேண்டாம் அவர்கள் நன்கு படித்தால் மட்டும் போதும் என்கிறார் ஒரு பிரபல ஹீரோயின். அவர் வேறு யாரும் அல்ல, நடிகை ஸ்ரீதே வி 
                                   
                             எனது மூத்த மகள் ஜானவி, சினிமாவில் நடிக்கப் போவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. என் இரண்டு மகள்களுக்குமே சினிமா தேவையில்லை. அவர்கள் நன்கு படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் சிறு வயதில் நன்றாக படிப்பேன். 


                         ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டதால் என்னால் மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாமல் போய் விட்டது. எனவே என் மகள்களாவது நன்றாக படிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னைப் போலவே என் மகள்களுக்கும் ஹெல்த் கான்சியஸ் அதிகம். 


                          அவர்களும் உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார்கள். என் மகள்கள் நன்கு படித்து ஒரு அந்தஸ்துக்கு வந்த பிறகு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவேன். இதுவே என் எதிர்கால திட்டம் என்றார் ஸ்ரீதேவி