HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஹோட்டலில். Show all posts
Showing posts with label ஹோட்டலில். Show all posts

Wednesday, 20 June 2012

போலீஸ் மாதிரி நடித்து கள்ளகாதலியை கடத்திய காதலன் உண்மையான போலீசில் கைது


                நெல்லை அருகே போலீஸ் சீருடை அணிந்து கள்ளக் காதலனுடன் பைக்கில் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
             நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள காடன்குளத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரின்ஸ் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபருடன் போலீஸ் சீருடை அணிந்த இளம்பெண் இருந்தார்.
               சீருடையைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர். அவர் மறுக்கவே அந்த பெண்ணையும், அவருடன் இருந்த வாலிபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
            விசாரணையில் அந்த பெண் முன்னீர்பள்ளம் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி சாந்தி என்பதும், அந்த வாலிபர் கீழச்செவலை சேர்ந்த சிதம்பரம் மகன் கதிரவன் என்பதும், இருவரும் கள்ளக்காதலர்கள் என்பதும் தெரிய வந்தது.
       கேரளாவில் உள்ள ஹோட்டலில் வேலை செய்யும் கதிரவன் கோபாலசமுத்திரத்திலுள்ள உறவினர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது சாந்தியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கதிரவனுடன் ஹோட்டலில் வேலை செய்யும் வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த ராஜன் என்பவர் ஊரில் நடந்த கொடை விழாவுக்கு வருமாறு அழைக்கவே கதிரவன் சாந்தியுடன் சென்றுள்ளார்.
         போலீஸ் சீருடையில் இருந்த சாந்தியை தனது மனைவி என்று கூறி உறவினர்களிடம் கதிரவன் அறிமுகப்படுத்தினார். கொடை விழா முடிந்து இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.