HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label murder. Show all posts
Showing posts with label murder. Show all posts

Friday, 1 June 2012

ஆபாச நடிகர் ஒருவர் கொலை சம்பவத்தை வீடியோ எடுத்தும்.....


            கனடா நாட்டு ஆபாச நடிகர் ஒருவர் மர்ம நபர் ஒருவரைக் கொன்று அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியதோடு, அந்த கொலை சம்பவத்தை வீடியோ எடுத்தும் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

             கனடாவை சேர்ந்தவர் லூகா ரோக்கோ மாக்னோட்டா (29). இவர் ஆபாச படங்களில் நடிப்பவர். இவர் கனடா அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை இ-மெயிலில் அனுப்பி உள்ளார். இதை பார்த்த அரசு அதிகாரிகள் அப்படியே உறைந்து போய்விட்டனர்.

              லூகா அனுப்பிய '1 Lunatic 1 Ice pick' என்ற அந்த வீடியோ படத்தில் மனித உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி ஒரு சூட்கேஸில் வைப்பது போல படம் பிடிக்கப்பட்டு இருந்தது. வீடியோவின் துவக்கத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் நிர்வாணமாக படுக்கையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

              அதன்பிறகு அவர் கத்தியால் குத்தப்படுகிறார். பிறகு அந்த நபரின் குரல்வளை அறுக்கப்படுகிறது. உயிரற்ற நிலையில் உள்ள அந்த உடலுடன் லூகா செக்ஸ் சில்மிஷம் செய்வது போன்று காட்டப்படுகிறது.

           கொடூரமாக கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலில் இருந்த ஒரு கால் கனடா கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகத்திற்கும், ஒரு கை ஒட்டாவா தபால் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லூகா இருந்த வீட்டின் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆணின் பின்புறம் அழுகி, புழுத்துப் போய் இருந்தது.

           ஆனால் இந்த வீடியோ எங்கு, எப்போது யாரால் படம் பிடிக்கப்பட்டது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. மேலும் வீடியோவில் வரும் நபரின் முகமும் மறைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் வீடியோவில் வரும் சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு படம்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

          இதேபோல லூகாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியில் இரு பூனை குட்டிகளை கொடுமைப்படுத்துவது போல இருந்தது. அந்த வீடியோவில் இரு பூனை குட்டிகள் ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் பையினுள் அடைக்கப்படுகிறது.

              அதன்பிறகு வீடுகள் சுத்தம் செய்யும் வாக்யூம் கிளினர் கொண்டு அந்த பிளாஸ்டிக் பையினுள் உள்ள காற்று முழுவதும் வெளியே இழுக்கப்படுகிறது. இதனால் சுவாசம் கிடைக்காமல் இரு பூனைக் குட்டிகளும் தவிக்கின்றன. இந்த வீடியோவையும் லூகா இ-மெயில் அனுப்பி வைத்திருந்தார்.

              மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக நேற்று போலீசார் லூகா தங்கியிருந்த வீடு மற்றும் ஸ்டுடியோவில் சோதனையிட்டனர். அப்போது அங்கியிருந்து ரத்தம் தோய்ந்த ஒரு படுக்கை விரிப்பை கைப்பற்றினர். இது குறித்து கனடா போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். மேலும் லூகா மீது கொலை வழக்கு பதிவு செய்து வலை வீசித் தேடி வருகின்றனர்.

          இவன் வேறு நாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்பதால் இன்டர்போலின் உதவியும் நாடப்பட்டுள்ளது. இவன் குறித்து அனைத்து நாடுகளுக்கும் இன்டர்போல் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.